எங்கதெ - இமையம்.

 


இமையத்தின் சிறந்த படைப்பு என பெரும்பாலானவர்கள் கூறும் கோவேறு கழுதைகள் நாவலைத்தான் முதலில் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். புத்தக நிலையத்தில் தேடும் போது , நாவல் சிறியதாக, கைகளில் தானாக வந்தமர்ந்ததால் எடுத்துக் கொண்டு வந்தேன்.

எங்கதெ  கணவனை இழந்த பெண்ணோடு தொடர்பில் விழுந்த ஒருவனின் வேதனைகளை சொல்லும் கதை. பேச்சு வழக்கில் செல்வதும், அத்தியாயங்களை மிகச் சிறியதாக பிரித்துள்ளதும் கதை வேகமாக நகர்கின்ற உணர்வைத் தருகின்றது. 

கதை உண்மையாய் இருக்குமோ என்று தோன்றுமளவிற்கு, கதை நாயகனின் உணர்வுகள், மனதின் அலைக்கழிப்புகள் அருமையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்ப திரும்ப அதுவே வருவது சற்று ஆயாசமாக உள்ளது. நாயகன் இறுதியில் எடுக்கும் முடிவு, நமக்கு முன்னரே தெரியுமளவுக்கு  மனதின் வலுவற்ற தன்மையை நமக்கு உணர்த்தி விடுகிறார். 

இவ்வகை உறவில் இருக்கும் கமலாவை விட, இதை சகித்துக் கொண்டிருக்கும் அவளின்  இரண்டு மகள்கள் பற்றிய எண்ணங்கள் நம் மனதில் வருத்தமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரே நாளில் வாசிக்க முடிகிற நாவல்.
க்ரியா பதிப்பகம் வெளியிட்ட இந்நூல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
வாசித்துப் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.