மலர்ச்சி
காவேரி ஆற்றில் தண்ணீர் குறைந்து வற்றிப் போன நிலையில், சில இடங்களில் நீர் தேங்கியுள்ளது. அங்கே அடர் பச்சை நிறத்தில் நீர் மாறியிருக்க, ஏதோ சாயக் கழிவு போல இருந்தது. ஆனால் உற்றுப் பார்த்தபோது பாசி வகை செழித்து நீர் மேல் பச்சை பெயிண்ட்டை கொட்டியது போல கிடந்தது. மீன்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காத அளவுக்கு அவை நீர் பரப்பில் வளர்ந்து கலந்துள்ளன. மீன்களின் செவுள்களில் இந்த பாசிகள் அடைத்துக் கொண்டு, நிறைய மீன்கள் இறந்தும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. பாசிகளின் மலர்ச்சி "Algal Bloom" என்று கூறுவது இந்நிகழ்வைத் தான். தண்ணீர் நிறைய வந்து, வேகமாக ஓடினால் தான் இது சரியாகும்.
#algalbloom
#pollution #naturelover #SaveThePlanet #savenature #kaveririver #kaveri
#saveearth #SaveNatureSaveEarth




Comments
Post a Comment