பழனி கோவில் காட்சி முனை.
மேற்குத் தொடர்ச்சி மலையில் மனதைத் தொலைத்த இடம். கண்ணெட்டும் தூரம் வரை மலைச் சரிவு, வலப்பக்கம் அழகாய் இறங்கும் அருவி அதற்குச் சற்று மேலே பனி சூழ்ந்த, பொறாமையை மூட்டும் கிராமம். பச்சை வண்ணத்தின் பல்வேறு துணை நிறங்கள் மலையில், மலைச் சரிவில், பள்ளத்தில், வனத்தின் மரங்களில் சிதறிக் கிடக்க, நீலம் அணைத்துக் கொண்டது தொலைவை. கடைசியாய் தெரியும் நீர்த் துளி, ஒரு பெரிய ஏரி அதன் பின்னே நுணுக்கிப் பார்த்தால் தெரியுமாம் பழனி மலைக் கோவில். பழனி கோவில் காட்சி முனை, பூம்பாறை போகும் வழியில். கொடைக்கானல்.

Comments
Post a Comment