9. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
துறத்தல்.
உடையின் மீது
உள்ளத்தின் கண்களை நீக்கும் போது
கதவொன்று திறக்கிறது.
உடலின் மீது
உள்ளத்தைத் துறக்கும்போது
காலவெளி ஒன்று தொடங்குகிறது.
உடையும், உடலும், உள்ளமும்
எதுவுமில்லா நான்.
எல்லாமும் உள்ள நான்.
எதன் முற்றுப்புள்ளி நான்?
எதனுடைய கால்கள் நான்?
என் மேல் சவாரி செய்வது யார்?
காலத்தின் கால்களில் நான் பயணிக்கிறேனா?
என்மேல் ஏறி காலம் பயணிக்கிறதா?
பேருந்துக்குள் மழை நீர்
அமர்ந்திருக்கும் இருக்கையில்
இறங்கி என்னை நனைக்கிறது.
தாவிக் குதித்து பேருந்துக்குள்
மீண்டும் அமர்ந்தேன்.

Comments
Post a Comment