7. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
யானைகள், எலிகள், மான்கள்.
நகரத்தின் ரகசியத்தை எலிகளும், யானைகளும் மட்டுமே அறிந்தவையாக உள்ளன. எலிகள் ரகசியப் பாதைகள் வழியே நகரத்தின் கண்களுக்கு அறியாமல் ஊடுருவி இருளில் அலைந்து திரிந்து வாழ்கின்றன.
யானைகளுக்கு நகரம் எப்போதும் திறந்தே கிடக்கின்றது. தடுப்பதும் மறைப்பதும் இல்லை. இருளிலும் வழி தவறுவதில்லை. உடைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு அனைத்து கதவுகளும் எப்போதும் திறந்தே கிடக்கின்றன.
மான்களுக்கு கரவுப்பாதைகள் தெரிவதில்லை. அவைகளின் வழிகள் சுவர்களில் சென்று முடிகின்றன. நத்தை போல நகரம் கதவை மூடிக் கொள்கிறது. இருளிலோ மான்கள் முற்றிலும் செயலிழக்கின்றன.
எல்லோருக்கும் முதுமை மெல்ல மெல்ல அணுகுகிறது.
முதுமையில் யானைகள் ராஜாவாகவே வாழ்கையில், எலிகள் நகரத்தின் தார் சாலைகளில், காகங்களால் உடல் கிழிக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. மான்கள் அப்போதும் வழிகளை தவறவிட்டுத் திரிகின்றன.
நகரம் பிரம்மாண்டமாய் வளர்ந்து எல்லாத் திசைகளிலும் தேவாங்கைப் போல நகர்ந்து கொண்டே செல்கிறது.
வாழ்க்கை நாட்களின் மீதேறி நகர்ந்து கொண்டே இருக்கிறது.

Comments
Post a Comment