11. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
அந்தரங்கம் புனிதமானது.
உடைந்த சுவர்களோடு
மூன்று பக்கமும்
நெடுஞ்சாலையை நோக்கி
திறந்து கிடக்கிறது
விரிவாக்கத்திற்காக
இடிக்கப்பட்ட இல்லத்தின் படுக்கையறை
எட்டிப் பார்க்காதீர்கள்.
அந்த அறையின்
கதவு
உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டுள்ளது.
அந்தரங்கம் புனிதமானது.

Comments
Post a Comment