10. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
மழையின் பெயர்.
பேருந்துக்கு வெளியே மழை.
சன்னலில் மழை என்று
எழுதினேன்.
என்ன என்றது?
உன் பெயர் என்றேன்.
வல இடதாய் உள்ளது
வாசிக்க முடியவில்லை.
எழுத்துக்களை என்னிடமே வீசியது.
திருப்பி எழுதினேன்.
எழுத்துக்களை மகிழ்ச்சியாய்
எடுத்துக் கொண்டது மழை.
மழையின் இதயம்
விரல் நுனியில் ஒட்டிக் கொண்டது.

Comments
Post a Comment