5. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
காலத்தில் நீந்தும் பறவை.
பச்சை ஒளி மின்னும் வானம்.
பச்சை வானத்தில் தெளித்த
நட்சத்திரங்கள்.
நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
வானம் அசையாமல் கிடக்கிறது.
நானும் நகர்கிறேன்.
பச்சையாய் அலையடிக்கும் கடல்.
அலையில் நகரும் வெள்ளை மீன்கள்.
கொஞ்சம் கடலும்,
வானமும்
தொட்டுக் கொள்ள மலையும்
போதும்
காலத்தைக் கடக்க.

Comments
Post a Comment