முடிவிலாத் தனிமை
எல்லாம் வறண்டு போனது.
உயிர், உடல், எல்லாம்.
என் உடலில்
தனிமை மட்டும் செழித்து
வளர்கிறது.
அதன் வேர்கள் என்னைச்
சுற்றி உயிரை அறுக்கிறது.
அதன் இலைகள் சுவாசக்
காற்றை பிடுங்கி கொள்கின்றன.
என் இரத்தத்தை உறிஞ்சி
சிவப்பாய் பூக்கின்றன
தனிமையின் பூக்கள்.
நஞ்சாய் பழுத்த, அதன் கனிகள்
என் தொண்டையை கவ்வுகின்றன.
அதன் நிழலும் என் மேல்
தீயாய் படர்கிறது.
புயலாய் வந்து இந்த தனிமையை
நீ பிழுது எறி.
உன் பார்வை பட்டு
வெந்து போகட்டும்
தனிமையின் வேர்கள்.
உன் முத்தம் பெற்று
துளிர்க்கட்டும் அன்பின் இலைகள்.
உன் வாசம் நுழைந்து, மீண்டு
வரட்டும் என் சுவாசம்.
உன் சேலை உரசி
உயிர் பெறட்டும் என்னிதயம்.
வருவாய் என,
முடிவில்லாத் தனிமையை
தவமிருக்கிறேன்.
Comments
Post a Comment