மரணத்தின் நிலத்தில்..,
ஒவ்வொரு அடியும்,
கவனமாய் எடுத்து வைக்கிறேன்.
காலுக்கு கீழே கண்ணி வெடிகள்
புதைக்கப்பட்டிருக்கின்றன
மரணத்தின் நிலத்தில்.
வெடிச்சத்தம் கேட்கும் போது
காதுகளை மூடிக்கொண்டு
மரணத்தின் வருகையை
எதிர் நோக்குகின்றேன்.
நண்பர்கள் உடல் சிதறி
நீங்குகிறார்கள்.
முழுமையடையும் ஒவ்வொரு
அடியும்,
நொடிகளை மீட்டுத்
தருகின்றது.
நொடிகளாய் நீள்கிறது
வாழ்வு.
மரணத்தின் நிலத்தில்,
ஒவ்வொரு நொடியும்
நீள்வதே வெற்றி.
Comments
Post a Comment