டைரி

 

ஒவ்வொரு
பிறந்த நாளின் போதும்,
ஒரு டைரி தொலைகிறது.

டைரியின்
பக்கங்களாக
நான் விரும்பி,
தொலைக்கின்ற என்
ரகசிய நொடிகள்.

நொடிகள் துளிகளாய்
சேர்ந்து, நதியாய் ஓடி,
டைரியில் தேங்கி
நிற்கின்றன.

இரகசியமாய் ஒளித்து
வைத்தாலும் அவ்வப்போது
யாரோ ஒருவர் வேடிக்கை
பார்க்க வந்து

பின்
கல்லெறிய,
டைரியை விட்டு தெறித்து
விழுகின்றன நினைவுகள்.

நீங்கள் வேடிக்கை பார்த்து
கல்லெறிய நான்
விலங்கு அல்ல...,
விட்டு விடுங்கள் என்
தொலைந்து போன
டைரிகளை...!

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.