சிறுகதை - ஐந்து இட்லி...!
ஐந்து இட்லி...!
நாள் 1: "ரெண்டு இட்லிலாம் நம்ம கடைல கிடையாதுங்க. அதோ அந்த பக்கத்து கடைல போய் வாங்கிக்கங்க!"
" அஞ்சா வாங்கிக்கங்க! முப்பது ரூபா. சில்லறை கிடையாது...!"
நாள் 2: "அஞ்சி இட்லி சாப்பிட்ருக்கிங்க, இன்னும் மூணா வாங்குனிங்கன்னா சில்லறை ரெண்டு ரூபா நான் தருவேன். ரெண்டுனா நீங்க 42 ரூபா தரணும்.!"
நாள் 3: "கேரி பைலாம் இல்லங்க! நீங்க தான் பை கொண்டு வரணும். மாநகராட்சிக்காரன் வந்தான்னா அஞ்சாயிரம் தண்டம் கட்டணும். நீங்க கட்டுறிங்கன்னா சொல்லுங்க, கேரி பை வச்சுக்கலாம்!"
"இட்லி லேட்டாகும். இந்த ஈடுக்கு ஆள் இருக்கு. இது முடிஞ்சு அடுத்த ஈடுல தான் கிடைக்கும். அவசரம்னா பக்கத்து கடைல வாங்கிக்குங்க."
நாள் 4: "சாம்பார்க்கு பாத்திரம் இல்லையா? போய்ட்டு எடுத்துட்டு வாங்க. பிளாஸ்டிக் பைல கட்டி தர்றது இல்லை."
நாள் 5: "எந்த கடைல இலை போடுறான். எல்லா கடையிலயும், பிளாஸ்டிக் பேப்பர போடுறான். என் கடைல மட்டும் தான் இலை போடுறேன். இந்த இலை மூன்று ரூபா, இட்லி ஆறு ரூபா தான். அஞ்சி இட்லி தான் தருவேன். அஞ்சுக்கு கம்மியா கிடையாது. வேணுமின்னா வாங்கிட்டு போங்க,
"இட்லிக்கு நல்ல அரிசில மாவு அரைத்து, ருசியான சாம்பார், சட்டினியோட கொடுக்கிறார். வயித்துக்கு ஒரு தொல்லையும் இல்லை. பொறுமையும், கையில் சரியான சில்லறையும், கணக்கு பண்ணி சாப்பிடவும் தெரிஞ்சா போதும். நேர்மையாக இருப்பவர்கள் அப்படிதான் ரொம்ப பேசுவார்கள். காதுல பஞ்சு வச்சுக்கிட்டா முடிஞ்சது. நமக்கு சூடான இட்லி தான் ஐயா முக்கியம்."
*******
Comments
Post a Comment