கதவை தட்டும் பறவைகள்..,
மஞ்சள் வெயில்.
அனல் காற்று வீசும்,
நகர வீதியின்
ஊடே நிறைய பறவைகள்
அலைகின்றன.
புதிய ஒலிகளின்
பரிணமிப்பில்
இத்தனை நாளாய்
காணாத, கேட்காத
பறவைகள் வந்துள்ளன
என்றுணர்ந்தேன்.
பறவைகளை பார்க்க
மலைகளையும், காடுகளையும்
தேடித் தேடி அலைந்தேன்.
இன்று ஊரடங்கில்
கதவை தட்டுகிறது
சில பறவைகள்.
Comments
Post a Comment