ஆதி உயிரியின் ஊழி விளையாட்டு...!

மரணத்தின் வாசம்
நகரம் முழுவதும்
வீச ஆரம்பித்து விட்டது.

ஆதி உயிரியின்
மாய கரங்கள் மெல்ல மெல்ல
ஒவ்வொருவரின் மேலும்
படர தொடங்கிவிட்டது.

மனித கூட்டத்தினால்
இடம் கிடைக்காமல்,
நகரத்தை விட்டு நீங்கிய
பறவைகள்
திரும்பிவிட்டன.

வெயிலும், அனல் காற்றும்
ஊளையிட்டு நடமாடும் நகரம்,
அந்நியமாய் தெரியும்
வேளையில்..,

ஆதி உயிர் உருவாகி,
செழித்து, பரிணமித்த
காலம் திரும்புகிறது.

காலத்தை தொடங்கி
வைத்து விளையாடிய
ஆதி உயிரி,
கால நீட்சியை முடிக்க
எண்ணி விட்டது.

சுழியத்திலிருந்து
மீண்டும் தொடங்கப்
போகிறது காலம்.

பேரழிவு கணங்களுடன்
ஆதி உயிரியின்
ஊழி விளையாட்டு,
இதோ
தொடங்கி விட்டது...!

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.