தொலைவு

ஞாயும், நுந்தையும்
திருக் கொண்டு,
கருக்கொள்ளும்
முன்னே உனக்கான
குழி ஒருங்கியிருக்க,
ஆழ் துளையில்,
மண் மூடிய பொழுதில்,
என்ன பேசினார்,
அந்த கடவுள்?
கருக்குழிக்கும், சவக்குழிக்கும்
இடையேயான உன் தொலைவு
ஏன் குறைந்தது
என்பதையா?

Comments

Popular posts from this blog

17. தினமும் தோன்றுவதில்லை வானவில்.

3. தினமும் தோன்றுவதில்லை வானவில்.

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு